No products in the cart.
இலங்கையில் மிகவும் பின்தங்கிய மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற மக்களின்
வாழ்வாதாரத்தையும், மாணவர்களின் கல்வி அறிவையும் மேம்படுத்தி, அவர்களை
இச்சமுதாயத்தில் எல்லோரிடமும் இணைந்து வாழ்வதற்கு ஊக்குவிப்பதற்காக
உருவாக்கப்பட்டது இந்த அறக்கட்டளை நிலையம் ஆகும்.
இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் வாழ்வாதார மேம்படுத்தல், கல்வி மேம்படுத்தல்
போன்ற நடவடிக்கைகளை நாம் ஈடுபட்டு வருகிறோம். அதில் மக்கள்
பயனடைந்திருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சி தரும் விடயமாகும். இந்த அமைப்பு இலங்கை
அரசின் லாப நோக்கமற்ற சட்டத்தின் கீழ் முறையாக பதிவு செய்யப்பட்ட ஒரு சமூக சேவை
அமைப்பாகும்.
• பெண்கள் வாழ்வாதார மேம்படுத்தல் திட்டம்.
• பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை
ஊக்குவிக்கும் முகமாக சிறு கைத்தொழில் அமைத்துக் கொடுத்தல்.
• பெண்கள் வாழ ;வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தையல் பயிற்சி அளித்தல்.
• வேலைவாய்ப்பற்ற குடும்பஸ்தர்கள் மற்றும் வாலிபர்களுக்கு சிறுகை தொழில்
அமைத்து ஊக்குவித்தல்.
• வீட்டுத் தோட்ட விவசாயத்தை மேம்படுத்தும் உதவி திட்டங்கள்.
• பாடசாலை மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்கு பிரயோக வகுப்புகளை
நடத்துதல்.
• பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கற்கை நெறியினை
கற்று முடிப்பதற்கு அவர்களுக்கான மாதாந்த உதவி தொககை வழங்கும் திட்டம்.
• வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற வியாதி பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி
மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தல்.
• மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கில் அறநெறி வகுப்புகள்
நடத்துதல்.
• பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயோதிபரை பராமரித்தல்.
• இளம் வாலிபர்களுக்கு தொழில் பயிற்சி திட்டங்கள்.
• இசைக்கருவிகள் கற்றுக் கொடுக்கும் பயிற்சி திட்டம்.
• விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துதல்.
• கனனி பயிற்சி திட்டம்.
• பின்தங்கிய கிராமங்களில் வாழுகின்ற மக்களுக்கு மலசலக்கூடம் அமைத்துக்
கொடுத்தல