இலங்கையில் மிகவும் பின்தங்கிய மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற மக்களின்
வாழ்வாதாரத்தையும், மாணவர்களின் கல்வி அறிவையும் மேம்படுத்தி, அவர்களை
இச்சமுதாயத்தில் எல்லோரிடமும் இணைந்து வாழ்வதற்கு ஊக்குவிப்பதற்காக
உருவாக்கப்பட்டது இந்த அறக்கட்டளை நிலையம் ஆகும்.
இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் வாழ்வாதார மேம்படுத்தல், கல்வி மேம்படுத்தல்
போன்ற நடவடிக்கைகளை நாம் ஈடுபட்டு வருகிறோம். அதில் மக்கள்
பயனடைந்திருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சி தரும் விடயமாகும். இந்த அமைப்பு இலங்கை
அரசின் லாப நோக்கமற்ற சட்டத்தின் கீழ் முறையாக பதிவு செய்யப்பட்ட ஒரு சமூக சேவை
அமைப்பாகும்.